உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும்

 


கடந்த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் அடுத்த மாதத்திற்குள் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெறுபேறுகள் தொடர்பான ஆவணங்களை மீள்பரிசீலனை செய்யும் பணி ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.

விசேட தேவையுடைய பரீட்சார்த்திகளின் விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி தொடரும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.