யுத்தகாலத்தின்போது நிறுத்தப்பட்டிருந்த பேரூந்து சேவை மீண்டும் ஆரம்பம்.



 







மட்டக்களப்பு மாவட்டத்தின் குருமண்வெளி துறையிலிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வரையில் சேவயிலீடுபடுவதற்குரிய இலங்கை போக்குவரத்து பேரூந்து சேவை ஒன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

 மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவாங்கரைப் பகுதிக்கும் எழுவாங்கரைப் பகுதிக்குமான பிரதான போக்குவரத்து மார்க்கங்களில் ஒன்றாக குருமண்வெளி – மண்டூர் படகுப் பாதை இடம்பெற்று வருகின்றது. இப்படகுப்பாதையில் பயணம் செய்யும் பிரயாணிகள் மட்டக்களப்புக்குச் செல்வதாயின் மிகவும் பலத்த சிரமத்தின் மத்தியில் அதிக செலவு செய்து தமது போக்குவரத்துக்களை மேற்கொண்டு வருகின்றனர்.

 இந்நிலையில் இவ்விடையம் குறித்து அப்பகுதி மக்கள் கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் அவர்களிடம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க அவரது முயற்சியினால் குருமண்வெளி துறையிலிருந்து குறித்த பேரூந்து சேவை மகிழூர், எருவில், கிராமங்களுடாக மட்டக்களப்பு வைத்தியசாலை வைக்கும் சேவையிலீடுபடுவதற்காக இலங்கை போக்குவரத்து சேவை ஒன்று தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பேரூந்து போக்குவரத்து சேவையின் ஆரம்ப நிகழ்வில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன், இலங்கை போக்குவரத்து சபையின் அதிகாரிகள், அப்பகுதி பொதுமக்கள் என பலரும் இணைந்திருந்தனர்.

 கடந்த யுத்தகாலத்தின்போது குறித்த போரூந்து சேவை இடம்பெற்று வந்தபோதிலும் பின்னர் அது நிறுத்தப்பட்டடிருந்தன. இதனால் அப்பகுதி மக்களும், குருமண்வெளி - மண்டூர் படகுப் பாதையைப் பயன்படுதிவரும் பிரயாணிகளும், விவசாயிகளும். மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டு வந்த நிலையில் தற்போது இப்போக்குவரத்து சேவை ஆரம்பிக்கப் பட்டுள்ளதையடுத்து அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளதோடு, இச்சேவையை ஏற்படுத்தியுள்ள இராஜாங்க அமைச்சர் சந்திரகாந்தன் அவர்களுக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளனர்.