தமிழ் மக்களின் உறுதியான ஒற்றுமையை வெளிக்காட்டும் வகையில் ஒரு பொது வேட்பாளர் என்ற விடயம் பேசும் பொருளாக மாறி உள்ளது- கோவிந்தன் கருணாகரன்

 

 


 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின்  வாக்கு களை பெற துடிக்கும் இவர்கள் தமிழர்களது தீர்வு விடயம் சம்பந்தமான கருத்து க்களை எந்த ஒரு வேட்பாளரும் முன் வைக்கவில்லை மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன்
தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியின் உருவாக்கம் பற்றிய தேவை தற்போது வடகிழக்கில் உணரப்பட்டுள்ளது

 எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்களின் உறுதியான ஒற்றுமையை வெளிக்காட்டும் வகையில் ஒரு பொது வேட்பாளர்  என்ற விடயம் பேசும் பொருளாக மாறி உள்ளது

தற்போதுள்ள ஜனாதிபதி தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு விடயம் சம்பந்தமாக எந்த ஒரு தீர்மானத்தையும் இதுவரை எடுப்பதாக இல்லை ஜனாதிபதி தேர்தல்  அண்மையில் இடம்பெற உள்ள போதிலும் எந்த ஒரு வேட்பாளரும் தமிழர்களது தீர்வு விடயம் சம்பந்தமான கருத்துக்களை முன் வைக்கவில்லை

தமிழ் மக்களது வாக்குகளை பெற துடிக்கும் இவர்கள் இலங்கை இந்தியா ஒப்பந்தத்தை கூட முற்றாக நிறைவேற்றுவேன் என்று கூறுவதற்கு  எவருமே தயாராக இல்லாத நிலையில் கடந்த காலங்களில் தமிழ் மக்கள் இவர்களை நம்பி ஏமாந்த வரலாறுகள் உள்ளன

 கடந்த காலங்களில் எல்லாரும் ஒற்றுமை  பட்டதைப் போன்று தற்போது ஒரு தேவை எழுந்துள்ளது என   நேற்று மாலை மட்டக்களப்பில் இடம்பெற்ற சிவராமின் படுகொலைக்கு எதிரான கண்டன ஆர்ப்பாட்டம் மற்றும் நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.