உதவும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் மயிலம்பாவெளியில் விளையாட்டு விழா!







































































(கல்லடி செய்தியாளர்)
"வழிதேடும் சிறுவர்களின் ஒளியாக மிளிர்வோம்" எனும் தொனிப் பொருளில் உதவும் கரங்கள் அமைப்பின் ஏற்பாட்டில் சுவாமி விபுலானந்தர் பாலர் பாடசாலை மாணவர்களின் சித்திரைப் புத்தாண்டு விளையாட்டு சனிக்கிழமை (27) மயிலம்பாவெளி உதவும் கரங்கள் இல்லத்தில் இடம்பெற்றது.

உதவும் கரங்கள் அமைப்பின் தலைவரும்,மட்டக்களப்பு தேசிய கல்வியியல் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளருமான ச.ஜெயராஜா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்,மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப் புரவலர் விநாயகமூர்த்தி றஞ்சிதமூர்த்தி பிரதம அதிதியாகவும்,மட்டக்களப்பு தேசிய கல்விக் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி நா.பிரசாந்தன் மற்றும் ஏறாவூர்ப்பற்றுப் பிரதேச சபை செயலாளர் வ.பற்குணம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும்,மட்டக்களப்பு மாவட்டப் பாலர் பாடசாலை கல்விப் பணியக கள உத்தியோகத்தர் எஸ்.பரணீதரன் மற்றும் புதிய சந்தர்ப்பங்கள் அமைப்பின் தலைவர் சா.சுதாகரன் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும்,ஓய்வுநிலை கோட்டக் கல்விப் பணிப்பாளர் அ.சுகுமாரன் மற்றும் நடராஜர் சைவ சித்தாந்த ஆய்வு மையம்  ஓய்வுநிலை அதிபர் சைவப் புலவர் திருமதி  வி.ராமச்சந்திரா ஆகியோர் அழைப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.

இதன்போது மாணவர்கள்,உத்தியோகத்தர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் நடாத்தப்பட்டன.

இப்போட்டிகளில் வெற்றியீட்டியோருக்குப் பெறுமதியான பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இதேவேளை உதவும் கரங்கள் அமைப்பு ஆரம்பிக்கப்பட்டு, 20 வருடங்கள் பூர்த்தியான நிலையில் விளையாட்டுப் போட்டி நடாதத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.