நோய்களுக்கான சிகிச்சைக்காக இலங்கையில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்ப மாலைதீவு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

 


மாலைதீவு மக்களை விபத்துக்கள் மற்றும் நோய்களுக்கான சிகிச்சைக்காக இலங்கையில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்ப மாலைதீவு அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இலங்கை மருத்துவமனை அமைப்பில் உள்ள அவசர சிகிச்சையின் தரத்தை அடிப்படையாகக் கொண்டு மாலைதீவின் இந்த முடிவினை எடுத்துள்ளது.

அதன்படி, அதற்கான விமான போக்குவரத்து சேவையை தொடங்க இரு நாட்டு அரசுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

மாலைதீவின் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் கப்டன் மொஹமட் அமீன் மற்றும் இலங்கையின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா ஆகியோருக்கு இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பில் இருந்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.