கண்டன அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

 



வரதன்

மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகம் முன்பாக அரச ஊழியர்களை தாக்கியதை கண்டித்தும் அவர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்து வேண்டி அங்கு கடமை புரியும் ஊழியர்கலாள்  முன்னெடுக்கப்பட்ட அமைதி வழியிலான கண்டன போராட்டம்
மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகம் முன்பாக அங்கு கடமை புரியும் ஊழியர்கள் தமக்கு நிரந்தர தீர்வு வேண்டி அமைதி வழியிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டது தமக்கு நிரந்தர தீர்வு வேண்டி அலுவலக நேரத்தில் அரச ஊழியர்களை தாக்கியதை கண்டித்தும் அவர்களது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் வகையிலும் இந்த கண்டன போராட்டம் இன்று அலுவலகத்திற்கு முன்னால் முன்னெடுக்கப்பட்டது இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டு மாவட்ட செயலாளர் எதிராகவே இந்த கண்டன அமைதிப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது
 கல்விப்புலத்திற்கு தகுதியற்றவர்களை பதவியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் எனும் கருப்பொருளுக்கு அமைவாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. அலுவலகத்தில் அரச அதிகாரி தாக்கப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறோம் எனும் பதாகைகள் ஏந்தியவாறு மட்டு வலயக் கல்வி ஊழியர்கள் இந்த ஆர்ப்பாட்டத்தீல் கலந்து கொண்டனர் மிகவும் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் சேவைக்கும் தொழிற்சங்க சேவைக்கும் பொருத்தம் இல்லாத உதய ரூபன் என்பவரை அனைத்து பதவியில் இருந்தும் நீக்குமாறும் தொழிற்சங்க அதிகார  அடாவடித்தனத்திற்கும் முடிவு கட்ட வேண்டி இவர்கள் இங்கு ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தனர்