இலங்கையில் உள்ள அரச பாடசாலைகளில் பணிபுரியும் பெண் ஆசிரியர்களின் எண்ணிக்கை ஆண் ஆசிரியர்களின் எண்ணிக்கையை விட மூன்று மடங்கு அதிகம் என தெரியவந்துள்ளது.
நாடு முழுவதும் 396 தேசியப் பாடசாலைகளும் 9730 மாகாணப் பாடசாலைகள் என, மொத்தம் 10126 பாடசாலைகள் உள்ளன. அவற்றில் பணிபுரியும் மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கை 236,738.
அவர்களில் 56,817 ஆண் ஆசிரியர்கள் மற்றும் 179,921 பெண் ஆசிரியர்கள். இது மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையில் 76 சதவீதமாகும்.
2022 ஆம் ஆண்டிற்கான கல்வி அமைச்சினால் தயாரிக்கப்பட்ட பாடசாலை அமைப்பின் சமீபத்திய புள்ளிவிபரத் தரவு அறிக்கையின் மூலம் இந்தத் தகவல் தெரியவந்துள்ளது.