மட்டக்களப்பு கல்லடி விநாயகர் வித்தியாலயத்தில் இடம்பெற்ற தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு!


















































(கல்லடி செய்தியாளர்)

கல்லடி விநாயகர் வித்தியாலய தரம் ஒன்று மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு வித்தியாலயத்தில்   இன்று வியாழக்கிழமை (22) வெகு சிறப்பாக    இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் திருமதி சிவலோஜினி விநோதன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயத் தலைவரும், முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வருமான தியாகராஜா சரவணபவன் பிரதம அதிதியாகவும், கல்லடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பிரதமகுரு பாலசதீஸ்வரக் குருக்கள் ஆன்மீக அதிதியாகவும், மட்டக்களப்பு கல்வி வலய ஆசிரிய ஆலோசகர் எஸ்.சிவகுமாரன், முன்னாள் வித்தியாலய அதிபர் ஈ.தியாகராஜா மற்றும் பாடசாலை அபிவிருத்திக் குழுச் செயலாளர் எஸ்.குணபாலன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

இதன்போது கல்லடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து தரம் ஒன்று வகுப்பில் புதிதாக இணைந்துள்ள மாணவர்கள் தரம் இரண்டு மாணவர்களால் மலர்மாலை அணிவிக்கப்பட்டு ஊர்வலமாக பாடசாலைக்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்நிகழ்வில் மாணவர்களின் ஆடல், பாடல், பேச்சு உட்பட பல்வேறு நிகழ்வுகள் அரங்கேறின.

அத்தோடு பிரதம அதிதியால் ஓவியத் துறையில் சாதனை படைத்து வரும் ஓவியர் ரவி வர்மா  பொன்னாடை போர்த்திக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது..