(கல்லடி செய்தியாளர்)
AQUA TOURISM நிறுவனத்தினால் மட்டக்களப்பு காந்திபூங்கா BATTIGATE அருகில் படகுச் சேவையொன்று அண்மையில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இப்படகுச் சேவை ஊடாக மட்டக்களப்பில் உள்ளூர் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்கக் கூடியதாக இருக்குமென நிறுவனத்தின் அதிகாரியொருவர் "batti media" செய்திச் சேவைக்குத் தெரிவித்தார்.
இச்சேவை மட்டக்களப்பு காந்திப் பூங்காவுக்கு முன்பாக உள்ள வாவியில் ஆரம்பித்து, யானை விழுந்த கல் ,கொக்குத்தீவு வெளிச்சவீடு வரை சென்று மீண்டும் காந்திப் பூங்கா வளாகத்தை வந்தடையும்.
இப்படகுச்சேவையில் பயணிக்கத் தினமும் பலர் வருகை தருவதையும் காணமுடிகிறது.
இந்நிலையில் "பாடும் மீன்களின்" சிறப்பைக் காண உள்நாட்டில் மட்டுமன்றி, வெளிநாட்டிலிருந்தும் சுற்றுலாப் பயணிகள் வருகை தருவார்கள் எனவும் அவ்வதிகாரி மேலும் தெரிவித்தார்.