வரதன்
மட்டக்களப்பு மாவட்ட விவசாயக் குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (01) திகதி இடம் பெற்றது.
விவசாயத்தை பிரதான தொழிலாகக் கொண்ட இம்மாவட்டத்தில் இம்முறை மேற்கொள்ளப்பட்ட விவசாயம் தொடர்பாகவும், பெரும்போக விவசாயத்தின் முன்னேற்றம், மழை வெள்ளத்தினால் பாதிக்கபட்ட விவசாய நிலங்களுக்கான காப்புறுதி நஸ்ட ஈடு வழங்கள் தொடர்பாகவும் இதன் போது கலந்துரையாடப்பட்டதுடன் 2024ம் ஆண்டிற்கான சிறு போக பயிர்ச்செய்கைக்காண கால அட்டவனையை தயாரிக்கப்பட்டது.
மேலும் கரடியனாறு விவசாய ஆராய்ச்சி மையத்திற்கான விவசாய ஆராய்ச்சி அதிகாரியின் நியமனம் தொடர்பாக விவசாயிகளினால் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுப்பட்டதுடன், நெல்லுக்கான விலை நிர்ணயம் செய்வதனால் தமது நெல்லினை நியாயமான விலையில் விற்பனை மேற்கொள்வதற்கு தேவையான நடவடிக்கை மேற்கொண்டு தருமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
இக்கலந்துரையாடலில் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர்களான திருமதி.சுதர்ஷினி ஸ்ரீகாந்த், மாவட்ட பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆர். ஜதிஸ்குமார், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், மட்டக்களப்பு பிராந்திய நீர்ப்பாசன பணிப்பாளர் என்.நாகரெத்தினம், பிரதேச செயலாளர்கள், உயர் அதிகாரிகள், விவசாய மற்றும் கால்நடை அமைப்புக்களின் குழுத்தலைவர்கள், மற்றும் விவசாய அமைப்புக்களின் உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.