2023ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 167 கர்ப்பிணிப் பெண்கள் பதிவாகியுள்ளது

 


2023ஆம் ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட 167 கர்ப்பிணிப் பெண்கள் பதிவாகியுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க தெரிவித்தார்.

அதே ஆண்டில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதிரான 1,502 குற்றங்கள்,
1,163 ஒப்புதலுடன் கற்பழிப்பு வழக்குகள், 339 கட்டாய கற்பழிப்புகளும் பதிவாகியுள்ளதாக இன்று அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்தார்.

இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் புள்ளிவிபரங்களின்படி, வட மாகாணத்தில் 119 பேர், வடமத்திய மாகாணத்தில் 236 பேர், மேல் மாகாணத்தில் 230 பேர், கிழக்கு மாகாணத்தில் 129 பேர், மத்திய மாகாணத்தில் 134, சப்ரகமுவ மாகாணத்தில் 136 என, நாடு முழுவதிலும் 1,502 குழந்தைகள் அல்லது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.