(கல்லடி செய்தியாளர்)
புலம்பெயர் புகலிடம் (சிறுகதைகள்) நூல் வெளியீட்டு நிகழ்வு கடந்த வாரம் களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றது.
களுவாஞ்சிகுடி கிராமத் தலைவரும், முகாமை ஆலய பரிபாலன சபைத் தலைவருமான அ.கந்தவேள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மண்முனை தென் எருவில்பற்றுப் பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரெத்தினம் முதன்மை அதிதிகளாகவும், மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப்புரவலர் விநாயகமூர்த்தி ரஞ்சிதமூர்த்தி மற்றும் களுவாஞ்சிகுடி சைவபரிபாலன சபைத் தலைவரும், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான க.மதிசீலன் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து சிறப்பித்தனர்.
மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்நிகழ்வில், ருக்மாங்கதன் ரிசார்த்தனி மற்றும் குகநேசன் அபர்ணிகா ஆகியோர் இறைவணக்கத்தையும், களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ மு.அங்குசசர்மா ஆசியுரையையும் வழங்கினர்.
இதன்போது களுவாஞ்சிகுடி சைவபரிபாலன சபைத் தலைவரும், கிழக்குப் பல்கலைக்கழக சிரேஸ்ட விரிவுரையாளருமான க.மதிசீலன் வெளியீடு செய்யப்பட்ட "புகலிடம்" நூலின் முதல் பிரதியினை மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் சைவப் புரவலர் விநாயகமூர்த்தி ரஞ்சிதமூர்த்திக்கு வழங்கினார். அதனைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டோருக்கு அதிதிகளால் சிறப்புப் பிரதிகள் வழகப்பட்டன.
இந்நூலுக்கான நயவுரையினை களுவாஞ்சியூர் அனோஜா பவளேந்திரனும், ஏற்புரை மற்றும் நன்றியுரையினை நூலாசிரியர் கே.ஞானசேகரம் (களுவாஞ்சிகுடி யோகன்) நிகழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.
.jpeg)
.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)
.jpeg)

.jpeg)





