ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 


பெலியத்தவில் ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகளில் மேலும் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைகளுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

30 வயதுடைய அவர் காலி - ரத்கம பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.