திருகோணமலையில் ‘அனைத்து தமிழ் அரசியல் தலைமைத்துவங்களின் கவனத்திற்கும்’ என்ற தலைப்பில் வடக்கு கிழக்கு
ஒருங்கிணைப்பு குழுவினால் இன்று துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டது.
துண்டுப்பிரசுரத்தில்
‘தமிழ் தேசிய அரசியலின் வரலாற்றிலும் தமிழரசு கட்சியின் வரலாற்றிலும்
முதல் முதல் வாக்கெடுப்பு மூலம் கட்சித் தலைமையை தெரிவு செய்வது கடந்த
வாரம் நடைபெற்றுள்ளது இந்த ஜனநாயக பண்பை வரவேற்பதோடு இது நிலைத்திட
வேண்டுமெனவும் அலாவுகின்றோம்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை
தமிழரசு கட்சி யின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று இடம்பெற்றிருந்த
நிலையில், அங்கு வருகை வந்தவர்களுக்கும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டன.





