ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டுக்கழகத்தில் மாபெரும் இரத்த தான முகாம்.

 










மண்முனைப்பற்று ஆரையம்பதி ஆரையூர் விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் மாபெரும் இரத்த தானம் வழங்கும் நிகழ்வு ஆரையூர் விளையாட்டுக்கழகத்தின் தலைவர் பாலேந்திரன் பாணுபாரதி தலைமையில் ஆரையம்பதி இராம கிருஷ்ணன் மிஷன் மகாவித்தியாலயத்தில் 25ஆம் திகதி இடம் பெற்றது.
இந் நிகழ்வின் பிரதம அதிதியாக மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி தட்ஷண கெளரி டினேஷ் கலந்து கொண்டார்.
உதிரம் கொடுத்து உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் இக்கழக வீரர்கள் உதிர தானத்தை மேற்கொண்டனர்.
இந் நிகழ்வில் ஆரையம்பதி கந்தசுவாமி ஆலய உதவி குரு உமாபதசர்மா, மாவட்ட இரத்த வங்கி வைத்தியர் கே.விவேகானந்தன், ஆரையம்பதி இராம கிருஸ்ணன் மிஷன் மகாவித்தியாலய அதிபர் எஸ்.ரவிச்சந்திரன், ஆரையூர் விளையாட்டுக்கழக உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேற்படி இரத்த தான முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ஆரையூர் விளையாட்டுக் கழகத்தினால் சான்றிதழ்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.