இந்தியாவின் 75வது குடியரசு தினத்தன்று யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி வைக்கப்பட்டது.

 






இந்தியாவின் 75வது குடியரசு தினமான வெள்ளிக்கிழமை (26) யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் இந்திய தேசியக் கொடியேற்றி வைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மருதடி லேனில் உள்ள யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்தில் யாழ்ப்பாணம் இந்திய உதவித் தூதுவர் ராகேஷ்  நட்ராஜ் ஜெயபாஸ்கர்  இந்திய தேசிய கொடியை எற்றிவைத்தார்.

இதனை தொடர்ந்து இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின வாழ்த்து செய்திகள் வாசிக்கப்பட்டதுடன், ஹிந்தி கற்று வரும் தமிழ் மொழி மாணவிகளின் நடனம் இடம்பெற்றதுடன், இந்திய காவற்படையின் வீரர் ஒருவரின் குடியரசு தின கவிதையும், மாணவியின் கவிதையும் இடம்பெற்றன.

இவ் நிகழ்வில் இந்திய உதவி தூதர அதிகாரி ராம் மகேஸ், தூதர அதிகாரிகள் குடும்ப உறவினர்கள், ஊடகவியாளர்  இராணுவத்தினர் பலரும் கலந்துகொண்டனர்.