மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் புதிதாக நியமனம் பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அலுவலக நடைமுறை தொடர்பான பயிற்சி வகுப்பு மட்டக்களப்பில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜே.ஜே. முரளிதரனின் வழிகாட்டுதலின் மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.மதிவண்ணன் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் (22) திகதி இடம் பெற்றது.
2020 மற்றும் 2022 ஆம் ஆண்டுகளில் புதிதாக நியமனம் பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அலுவலக நடைமுறை தொடர்பான விடயங்களை தெளிவுபடுத்துவதற்கு கான ஒரு நாள் பயிற்சி நெறியாக இது அமைந்திருந்தது.
இந் நிகழ்விற்கு வளவாளராக பிரதம உள்ளக கணக்காய்வாளர் திருமதி.ஆர்.காயத்திரி கலந்துகொண்டதுடன், சிறப்பான முறையில் வளவாண்மை மேற்கொண்டிந்தார்.
இதன் போது அபிவிருத்தி உத்தியோகத்தர்களிற்கு அலுவலக நடைமுறை தொடர்பாக இருந்து வந்த ஐய வினாக்களுக்கான விளக்கங்களுக்கான விரிவாக விளக்கங்கள் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.