இராஜாங்க அமைச்சர் டயனா கமகே மொட்டை அடித்து இந்திய திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார்

 


இந்தியத் திரைப்படமொன்றில் நடிப்பதற்கு இலங்கை சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயனா கமகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

அதன்படி, அந்த பாத்திரத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ள டயனா கமகே, அதற்காக மொட்டையடிக்கவுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இலங்கை - இந்திய நட்புறவுக்காக அனுபவம் வாய்ந்த இந்திய திரைப்பட இயக்குனரால் உருவாக்கப்படும் புத்தமதக் கருவைக் கொண்ட திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க டயனா கமகே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.