ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வாழ்நாள் தலைவராக முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய மாநாட்டு, கொழும்பு சுகததாஸ உள்ளக அரங்கில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கிறது. அதிலேயே இத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மஹிந்தவை, வாழ்நாள் தலைவராக தெரிவு செய்வதற்கான பிரேரணையை காமினி லொக்குகே முன்மொழிந்தார். அதனை ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ வழிமொழிந்தார்.