இலங்கையின் கொழும்பில் செயற்பட்டு வரும் வீ.ஐ.பி ஸ்டூடியோ
நிறுவனம் இந்த உலக சாதனை படைக்கும் முயற்சியை மேற்கொண்டு அதில் வெற்றியும் ஈட்டியுள்ளது.
அன்றைய தினம் காலை முதல்
மணமக்களை ஒவ்வொரு புகைப்படத்துக்கும் ஏற்றவாறு நிற்க வைப்பது, கலை நுணுக்கத்துடன் புகைப்படங்களைப் பிடிப்பது, அவற்றை உடனடியாக அங்கு வைத்தே டிசைன் செய்வது, அதன் பின் டிசைன் செய்து முடிக்கப்பட்ட படங்களை எடுத்துச் சென்று அல்பமாக தயாரித்து மண மேடையில் வைத்து மணமக்களின் கைகளில் ஒப்படைப்பது வரை எட்டு மணிநேரத்தை வீ.ஐ.பி ஸ்டூடியோவைச் சேர்ந்த கலைஞர்கள் இந்த உலக சாதனைக்காக எடுத்துள்ளார்கள்.
இந்த உலக சாதனை அவர்களின் செயல்திறன், தொழில்நுட்பத் திறன் மற்றும் படைப்பாற்றல் சிறப்பை வெளிப்படுத்துகிறது.
இலங்கையின் கொழும்பு, கெலனியவில் அமைந்துள்ள க்லோவர் பென்க்யூஸ்ட் ரெசார்ட்டில் இந்த நிகழ்வு நடைபெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.
சோழன் உலக சாதனை படைத்த வீ.ஐ.பி. ஸ்டூடியோ
உரிமையாளர் திரு.ஜீ. தனேஷ்வரனை பலரும் வாழ்த்திப் பாராட்டினார்கள்.





.jpeg)

.jpeg)

.jpeg)
.jpeg)
.jpeg)
.jpeg)







