மட்டக்களப்பு கல்லடியில் சுனாமி நினைவேந்தல் நிகழ்வு!






























(கல்லடி செய்தியாளர்)

சுனாமி அனர்த்தம் இடம்பெற்று 19 வருடங்கள் பூர்த்தியான நிலையில் மட்டக்களப்பு கல்லடி கடல்மீன்கள் விளையாட்டுக் கழகம் கனடாவில் வசிக்கும் காராளசிங்கம் சரவணபவனின் நிதிப் பங்களிப்பில் கல்லடிப் பிரதேசத்தைச் சேர்ந்த புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற பாடசாலை மாணவர்களுக்கு வெற்றிக் கிண்ணம் வழங்கும் நிகழ்வு இன்று செவ்வாய்க்கிழமை (26) கல்லடி பாலத்துக்கருகில் அமைந்துள்ள கடல்மீன்கள் சிறுவர் பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆழிப்பேரலை நினைவுத் தூபியில் இடம்பெற்றது.

இதன்போது அதிதிகளால் அகல் விளக்கேற்றப்பட்டு, ஆழிப்பேரலை அனர்த்தத்தில் உயிர்நீத்த உறவுகளுக்கு 2 நிமிட நேரம் அகவணக்கம் செலுத்தப்பட்டது. அத்தோடு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மற்றும் கல்லடி முகத்துவாரம்  விபுலானந்தா வித்தியாலயத்தில் ஒன்பது "ஏ" சித்தி பெற்ற மற்றும் எட்டு "ஏ" சித்தி பெற்ற மாணவர்கள், புதுமுகத்துவாரம் இக்னேசியஸ் வித்தியாலயத்தில் சிறப்பாகச் சித்தியடைந்த மாணவிகள் வெற்றிக் கிண்ணம் மற்றும் அப்பியாசக் கொப்பிகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இந்நிகழ்வில், மண்முனை வடக்குப் பிரதேச செயலாளர் வி.வாசுதேவன், சித்த ஆயுள்வேத வைத்தியர் கணபதிப்பிள்ளை விஸ்வலிங்கம், அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதித் தலைவர் கதிர் பாரதிதாசன், நிதி அனுசரணையாளரின் பிரதிநிதி எஸ்.அகிலேந்திரராஜா மற்றும் பிரபல வர்த்தகர் ச.சிவபாதசுந்தரம் (அண்ணாச்சி) ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.