மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு மாவட்ட செயலக வளவில் நடைபெற்றதுடன் சுனாமி அனர்த்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரு முகமாக நினைவஞ்சலியும் இடம் பெற்றது

 










சுனாமி அனர்த்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரு  முகமாக பாதுகாப்பு அமைச்சின்வழிகாட்டுதலில் அணர்த்த முகாமைத்துவ பிரிவு ஏற்பாடு செய்துள்ள முகாமைத்துவ பிரிவு ஏற்பாடு செய்த தேசிய பாதுகாப்பு தின நிகழ்வுகள் மாவட்ட மட்டத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது    இதற்கமைய மட்டக்களப்பு மாவட்டத்துக்கான தேசிய பாதுகாப்பு தினநிகழ்வு மாவட்ட செயலக வளவில்    நடைபெற்றது நிகழ்வின் போது தேசியக் கொடியேற்றப்பட்டு உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலிநடை பெற்றதுடன் இறந்தவர்களின்ஆத்மா சாந்திக்கு மெழுகுவர்த்திகள் ஏற்றப்பட்டு
  பிரார்த்தனைவழிபாடுகளும் செய்யப்பட்டன இந் நிகழ்வில் மதகுருமார்கள் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் திணைக்களங்ககளின் தலைவர்கள் மற்றும் அரச பணியாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர் பாதுகாப்பு அமைச்சின் வழிகாட்டுதலில் மட்டக்களப்பு மாவட்ட பிரிவு இந்த நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தது தேசிய பாதுகாப்பு தின நிகழ்வு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது .