(பழுவூரான்)
சித்தாண்டியில் போராட்டத்தில் ஈடுபடும் மேய்ச்சல் தரையாளர்களுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் சனிக்கிழமை (23) இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான இராசமாணிக்கம் சாணக்கியன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பா.அரியநேத்திரன், ஈரோஸ் ஜனநாயக முன்னணிக உறுப்பினர்கள், சமூக ஏற்பாட்டாளர்கள், பொதுமமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இதன்போது நிகழ்வில் பங்கேற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்களின் பிரச்சினைக்கான தீர்வு உடனடியாக எட்டப்பட வேண்டுமெனக் கருத்து தெரிவித்தனர்.
இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட ஈரோஸ் ஜனநாயக முன்னணி உறுப்பினர்களால் பிரதான வீதியூடாகப் பயணித்த மக்களுக்கு மேய்ச்சல் தரைப் பிரச்சினை தொடர்பாக தம்மால் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்தை விநியோகித்தமை குறிப்பிடத்தக்கது.