மாணவர்களுக்கு, சைவக் குருமார் சங்கத்தால் கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

 












 

 மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட பாடசாலைகளில் கல்வி கற்கும் வறுமைக் கோட்டிற்குட்பட்ட மாணவர்களுக்கு, சைவக் குருமார் சங்கத்தால்
கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டன.

சைவக் குருமார் ஒண்றிய தலைவர் சிவஸ்ரீ.கா.கிருஷ்ணப்பிள்ளை குருக்கள் தலைமையில்
சந்திவெளியிலுள்ள கலாச்சார மண்டபத்தில் வைத்து கற்றல் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன.

அத்துடன் சைவக்குருமார்களுக்கான ஒழுக்கத்தை பேணும் பொருட்டும், சங்கத்தினை வளர்சி பாதையில் முன்னெடுக்கும் முகமாக சத்தியப் பிரமாண
நிகழ்வும் இடம்பெற்றது.

அதிதிகளாக சிவஸ்ரீ. எம்.சண்முகம் குருக்கள், கிரான் பிரதேச செயலாளர் எஸ்.ராஜ்பாவு, கல்குடா கல்வி வலய பிரதி கல்விப்பணிப்பாளர் கே.ஜெயவதனன், காலாச்சார
உத்தியோகஸ்த்தர் ப.சிவராம் மற்றும் பிரதேச பாடசாலை அதிபர்கள் கலந்து கொண்டனர்.