திம்புலாகல, திவுலபத்தனை கிராமத்திற்கு வந்த தமிழ் தேசிய முன்னணியின் தலைவர் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு எதிராக அக்கிராம மக்கள் குழுவொன்று வளமண்டி பாலத்தை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
வெள்ளிக்கிழமை (15) காலை வந்த எம்.பி.யை பயணிக்க அனுமதிக்கவில்லை, சுமார் ஒன்றரை மணி நேரம் வளமண்டி பாலத்திற்கு அருகில் வாகனத்துக்கு உள்ளேயே இருந்த எம்.பி., கிராம மக்களின் கூச்சல்களுக்கு மத்தியில் திரும்பிச் சென்றார்.
அம்பிட்டிய சுமனரதன தேரர் மற்றும் பொல்கஹ அரவ பிரதேசத்தைச் சேர்ந்த தேரர் உட்பட பெருந்தொகையான கிராம மக்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் நடந்த உடனேயே ஸ்தலத்துக்கு விரைந்த கரடியனாறு பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
இந்த அரசியல்வாதி இனவாதத்தை தூண்டி தமது பயிர்ச்செய்கை நிலத்தை தடை செய்ய வந்துள்ளதாக கிராம மக்கள் குற்றம் சுமத்தினர்.