அனோமிகா கலைக்கூடலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அனாமிகா நினைவுப் பேருரைத் தொடர்!

  























(கல்லடி செய்தியாளர்)

அனாமிகா கலைக்கூடலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அனாமிகா நினைவுப் பேருரைத் தொடர்- 10  இன்று செவ்வாய்க்கிழமை (26) மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்புத் தமிழ்ச் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தி றஞ்சிதமூர்த்தி சிறப்பு விருந்தினராகக் கலந்து சிறப்பித்தார்.

இதன்போது மரபு வழிக் கலைகளின் எதிர்கால நிலைபேறாக்கம் குறித்த, முகாமைத்துவ நோக்கிலான எண்ணக்கருக்கள் - ஒரு சிந்தனைப் பகிர்தல் எனும் தலைப்பில் அனாமிகா நினைவுப் பேருரையினை கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவகப் பணிப்பாளர் பேராசிரியை திருமதி புளோரன்ஸ் பாரதி கென்னடி நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் தலைக்கோல் விருதினை அண்ணாவியார் ஆரையூர் அருள் எனும் அருளம்பலமும், திருமதி சுபித்திரா கிருபாகரனும் பெற்றுக் கொண்டனர். இவர்கள் தொடர்பான  விருதுரைகளை முறையே கல்லடி சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக முதுநிலை விரிவுரரையாளர் க.மோகனதாசன் மற்றும் செங்கலடி மத்திய கல்லூரி ஆசிரியை திருமதி நகுலேஸ்வரி தனேந்திரராஜன் ஆகியோர் நிகழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வின் இறுதியில் நன்றியுரையினை செல்வி அம்ரிதா விஜயன் நிகழ்த்தனார். அத்தோடு தனது வசீகரக் குரலால் கிழக்குப் பல்கலைக்கழக சுவாமி விபுலானந்தா அழகியற் கற்கைகள் நிறுவக சிரேஷ்ட விரிவுரையாளர் க.மோகனதாசன் தொகுத்து வழங்கினார்.