(கல்லடி செய்தியாளர்)
கல்லடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய பரிபாலன சபை வருடா வருடம் நடத்தும் திருவாசகம் முற்றோதல் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை (24) ஆலயத்தில் பக்தி பூர்வமாக இடம்பெற்றது.
ஆலய பரிபாலன சபை திருவாசகம் முற்றோதல் ஏற்பாட்டுக் குழுத் தலைவர் பிறேமானந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ பாலசதீஸ்வரக்குருக்கள்ஆசியுரை வழங்க, ஆலய பரிபாலன சபைப் போசகர் இ.தனபாலன் சிவபுராணத்தை ஓதி திருவாசகம் முற்றோதலை ஆரம்பித்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து பாடசாலை மாணவர்கள் உட்படப் பல ஓதுவார்கள் பங்கேற்று திருவாசகத்தை முறைப்படி ஓதினர்.
இந்நிகழ்வில் ஆலய பரிபாலன சபைத் தலைவரும், முன்னாள் மட்டக்களப்பு மாநகர முதல்வருமான தியாகராஜா சரவணபவன், ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் மற்றும் அடியவர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.