முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சரின் கிழக்குமாகாண ஒருங்கினைப்பு செயலாளராக தவபாலன் ஹரிபிரதாப் நியமிப்பு--




நிருபர் - செ.ஞானச்செல்வன் - மட்டக்களப்பு

முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சரின் கிழக்குமாகாண ஒருங்கினைப்பு செயலாளராக மட்டக்களப்பைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபரும் சமூக சேவையாளருமான தவபாலன் ஹரிபிரதாப் இராஜாங்க அமைச்சர் டிலுமு. எஸ். அமுனுகம வினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கடந்த காலத்தில் கிழக்கு மாகாண சுற்றுலாத்துறை பணிப்பாளராகவும் கிழக்கு மாகாண போக்குவரத்து முகாமையாளராகவும் செயற்பட்டுவந்த தவபாலன் ஹரிபிரதாப் முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சரின் கிழக்குமாகாண ஒருங்கினைப்பு செயலாளராக நேற்று 22ம் திகதி வெள்ளிக்கிழமை அவருக்கான நியமன கடிதத்தினை இராஜாங்க அமைச்சர் அவரது அமைச்சு காரியாலயத்தில் வைத்து  வழங்கி வைத்துள்ளார்.