மட்டக்களப்பு புளியந்தீவு ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்தில் சுனாமியினால் உயிர் நீத்த உறவுகளின் 19ஆவது ஆண்டு நினைவஞ்சலியும், விசேட பூசைகளும் இடம்பெற்றது.

 











 வரதன்

 கிழக்கு மாகாணத்தில் சுனாமி  தாக்கத்தினால் அதிக உயிர்கள் காவு கொள்ளப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் சுனாமியினால் உயிர் நீத்த உறவுகளின் 19ஆவது ஆண்டு நினைவஞ்சலி பூசைகள் மாவட்டத்தின் பல பகுதிகளிலும்  உள்ள இந்து ஆலயங்களில் இன்று காலை அவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி உணர்வு பூர்வமாக முன்னெடுக்கப்பட்டது.  

இதேவேளை சுனாமி தாக்கத்தின் போது மட்டக்களப்பு புளியந்தீவு ஸ்ரீ சித்தி விக்னேஸ்வரர் ஆலயத்திலும் அன்றைய சுனாமி தாக்கத்தின் போது பாதிக்கப்பட்டவர்கள் இவ்வாலயத்தில் தஞ்சம் புகுந்து இருந்தனர் இதனை முன்னிட்டு ஆலய பரிபாலன சபையின் தலைவர். சி.மங்களராஜன் தலைமையில் விசேட நினைவஞ்சலி பூசைகள் இன்று இடம்பெற்றது.

 ஆலயத்தின் பிரதம குரு சிவ ஸ்ரீ கணேச ரிவிசாந்த குருக்கள் இதனை நடத்தி வைத்தார் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நல்லாசி வேண்டியும் இனிமேல் மாவட்டத்தில் இவ்வாறான ஒரு அனர்த்தம் நிகழாமல் இருக்க 2 நிமிட மெளன இறைவணக்கம் முன்னெடுக்கப்பட்டதுடன் இந்த அனர்த்தத்தில் உயிரிழந்த உறவுகளின் நினைவாக தீபச்சுடர் ஏற்றி அஞ்சலியும் இங்கு நிகழ்த்தப்பட்டது இதன் போது பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களும் ஆலய பரிபாலன சபையின் உறுப்பினர்கள் பொதுமக்கள் பலரும் இந்த அஞ்சலி நிகழ்வில் கலந்து  கொண்டனர்.