"தொழின்முறைப் பயிற்சி பட்டறை" அம்பாறை கமு/சது/அன்னமலை மகா வித்தியாலயத்தில் இடம் பெற்றது .

 





 

அபிவிருத்திக்கான சமூக முயற்சியாளர்களின் வலையமைப்பு   (SPAND) அமைப்பிற்காக KTP Consultancy & Training நிறுவனத்தின் 2வது  பயிற்சி  582வது மற்றும் 583வது தொழின்முறைப்  பயிற்சிகளாக  அம்பாறை கமு/சது/அன்னமலை மகா வித்தியாலயத்தில் 2023.11.27  மிகச்சிறப்பாக வழங்கப்பட்டது.

 "வெற்றிக்கான மென் திறன்கள்" (Soft Skills for Success - S3) எனும் தலைப்பில்  தரம் 9 - 13  மாணவர்களுக்கும் "சிறந்த பெறுபேறுகளுக்கான குழு முயற்சி" (Team Effort for Better Results - TEBR) எனும் தலைப்பில் ஆசிரிர்களுக்கும் பங்குபற்றல் அணுகுமுறையில் (Participatory Approach) சுய ஊக்குவிப்புப் பயிற்சிகளை நடத்தினார் Corporate Trainer , Master Coach -  Professional Business & Life Coaching Dr.K.T.Prashanthan துரைராஜா பிரஷாந்தன் அவர்கள்.

சிறப்பான  தொடக்க நிறைவு உரைகளை ஆற்றி சகல ஒத்துழைப்புக்களையும்   வழங்கியவர் கல்லூரியின் அதிபர்  திருமதி.நிலந்தினி ரவிச்சந்திரன் அவர்கள்.

நிகழ்ச்சி & தொடர்பாடல் ஒருங்கிணைப்பு மற்றும் ஆவணப்படுத்தல்களும் செய்தவர் SPAND அமைப்பின் தலைவர் திரு.ராஜன் சுவோஜன்.

திரு கஜன்,மூத்த உறுப்பினர் தென்கிழக்கு பல்கலைக்கழக சிங்கள பாடநெறி விரிவுரையாளர் திருமதி.R.சந்திரகுமாரி, SPAND குழுவினரும் கலந்துகொண்டிருந்தனர்.

இவ்விரு இலவசப் பயிற்சிகளும்  KTP Consultancy & Trainning நிறுவனத்தின் தனிநபர் சமூகப் பொறுப்புணர்வு (PSR - Personal Social Responsiblity) நடவடிக்கைகள் என்பது குறிப்பிடத்தக்கன.

சாட்டுக்களைச் சொல்லி வளவாய்ப்புக்களைத் தட்டிக்கழிக்காது தொலைநோக்குப் புத்தாக்கத் தலைமைத்துவத்துடன் செயற்பட்ட அவர்கள் அனைவரினதும் உயர் பண்பு பாராட்டுக்குரியது.

பல பாடசாலைகள் இத்தகு பயிற்சிகளை வேண்டினாலும் அனுசரணைகள் பெரிதும் அவசரமாய் அவசியமாய் தேவை. நல்லுள்ளங்கள் அனுசரணைத் தொடர்புகளுக்கு +94715650258