மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு தின நிகழ்வு.

 


மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு தின நிகழ்வு, கல்லூரி அதிபர் இரா.பாஸ்கரன் தலைமையில்
கல்லூரி பிரதான மண்டபத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
பிரதம அதிதியாக மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரும், கிராமிய வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சருமான சிவநேசத்துறை சந்திரகாந்தன்
கலந்துகொண்டார்.
பரிசளிப்பு நிகழ்வை சிறப்பிக்கும் வகையில், இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தின் நிதியொதுக்கீட்டின் மூலம், புனரமைப்புச் செய்யப்பட்ட மெடிஸ்த
மத்திய கல்லூரியின் உள்ளக வீதி இன்றைய தினம் இராஜாங்க அமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது.
பாடசாலை மட்டத்தில் நடத்தப்பட்ட பரீட்சைகள், ஐந்தாம் தரம் புலமைப்பரிசில் பரீட்சை, கல்விப் பொது தர சாதாரண தரம் மற்றும் உயர் தரத்தில் சிறந்த புள்ளிகளை
பெற்ற மாணவர்கள், பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெற்ற மாணவர்கள் மற்றும் கல்லூரி சாரணியம் மாணவர்களுக்கும் பரிசில்களும், சான்றிதழ்களும்
வழங்கப்பட்டன.
மாணவர்களின் படைப்பாற்றல், கலை இலக்கிய சிந்தனைகளை வெளிப்படுத்தும் நோக்குடன், ‘மத்திய தீபம்’ எனும் சஞ்சிகையும்
வெளியிடப்பட்டது.
தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூபாலப்பிள்ளை பிரசாந்தன், கல்வித் திணைக்கள அதிகாரிகள் அயல் பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், கல்லூரியின் பழைய மாணவர்கள், வைத்திய அதிகாரிகள், கல்லூரியின் அபிவிருத்திக் குழு உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.