தௌபீக் எம்.பி யினால் கிண்ணியா மத்திய கல்லூரியின் பாவனைக்காக நீர்த்தாங்கி கையளிக்கும் நிகழ்வு .

 








(எஸ். சினீஸ் கான்.)

கிண்ணியா மத்திய கல்லூரி பழைய மாணவர்கள் சங்கம் மற்றும் அதிபர் அவர்களின் வேண்டுகோளுக்கமைய திருகோமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் யின் முயற்சியால் ISRC நிறுவனத்தினால்  நிர்மாணிக்கப்பட்ட 5000 லீட்டர் நீர்த்தாங்கி செவ்வாய்க்கிழமை  (09) பாடசாலை நிர்வாகத்திடம் பாவனைக்காக கையளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ISRC நிறுவனத்தின் உத்தியோகத்தர்கள்,  பாடசாலை நிருவாகம் மற்றும் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து சிறப்பித்தனர்.