மட்டக்களப்பில் 3.5 கோடி செலவில் இரண்டு வீதிகளுக்கான புனரமைப்பு பணிகள் ஆரம்பம்!

 


ரணில் 2024 செயலணியின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் அவர்களினால் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்க அவர்களிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைய மட்டக்களப்பில் இரண்டு வீதிகள் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்றது.
ஜனாதிபதியால் ஒதுக்கீடு செய்யப்பட்ட 3.5 கோடி ரூபாய் செலவில் புரைமைப்புச் செய்யப்படும் செங்கலடி மாணிக்கப் பிள்ளையார் கோவில் வீதி மற்றும் கொம்மாதுறை 10ம் கட்டை வீதி என்பனவே உடனடியாக புனரமைப்பு வேலைகள் இடம்பெற்று வருகின்றன.
ரணில் 2024 செயலணியின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் அவர்களினால் தொடர்ச்சியாக ஜனாதிபதி அவர்களிடம் பல்வேறுபட்ட அபிவித்தி செயற்பாடுகளுக்காக நிதிகள் கோறப்பட்டு வந்த நிலையில் அவை அனைத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டு அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.