இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

 


கட்டாரில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தப்படி இஸ்ரேல் - ஹமாஸ் இடையேயான போர் நிறுத்தம் மேலும் 2 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் உள்ள ஹமாஸ் தீவிரவாதிகள், இஸ்ரேல் மீது கடந்த ஒக்டோபர் 7-ஆம் திகதி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர். 

அதோடு, தரைவழியாகவும், வான் வழியாகவும், இஸ்ரேல் பகுதிக்குள் ஊடுருவி இஸ்ரேலியர்களை தாக்கினர். 

இந்தத் தாக்குதலில் பொதுமக்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளே அதிகமாக இறந்திருப்பதாக தகவல் வெளியாகி, உலக மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 

இதையடுத்து, ஹமாஸ் அமைப்புக்கு எதிரான தாக்குதலை இஸ்ரேல் தீவிரப்படுத்தி வருகிறது. 

குறிப்பாக, ஹமாஸின் முக்கிய தலைவர்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.

 இதனிடையே, எகிப்து, கட்டார் மத்தியஸ்தம் செய்ததின் அடிப்படையில், 4 நாட்கள் போர் நிறுத்தம் அறிவிக்கப்படது. இந்த போர் நிறுத்தம் இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில், மேலும் 2 நாட்கள் நீட்டிக்கப்படுவதாக கட்டார் அறிவித்துள்ளது.