தலைமைத்துவம் மற்றும் உளநலம் தொடர்பான பயிற்சி செயலமர்வு மட்டக்களப்பு தன்னாமுனை மியானி நகர் மண்டபத்தில் இடம்பெற்றது.
மட்டக்களப்பு உளநல உதவி நிலையம் மற்றும் கரித்தாஸ் எகெட் நிறுவன இணைந்த ஏற்பாட்டில் மிசரியர் நிறுவன நிதி அனுசரணையுடன்
செயலமர்வு இடம்பெற்றது.
செங்கலடி பிரதேச செயலக பிரிவில், கிராம மட்டத்தில் செயற்படுகின்ற தெரிவு செய்யப்பட்ட ஆசிரியர்கள்,
அரச அலுவலக உத்தியோகத்தர்கள் கிராம மட்ட இளைஞர் யுவதிகள் பயிற்சி செயலமர்வில் கலந்துகொண்டனர்
மட்டக்களப்பு கரிதாஸ் எகட் நிறுவன நிகழ்ச்சி திட்ட இணைப்பாளர் எஸ்.மைக்கலின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற செயலமர்வில்
வளவாளராக மட்டக்களப்பு உளநல உதவி நிலைய இயக்குனர் அருட்பணி போல் சற்குணநாயகம் அடிகளார் கலந்து கொண்டார்.