மட்டக்களப்பு மாவட்டத்தின் வாவியை அண்டியுள்ள பிரதேசங்களில் உள்ள வயல் நிலங்களில் வெள்ள நீர் நிரம்பி காணப்படுவதால் வேளாண்மை விதைப்பினை ஆரம்பிப்பதில் விவசாயிகளுக்கு இருக்கும் இடர்பாடுகளை உரிய திணைக்களங்களுக்கு அறிவித்ததனைத் தொடர்ந்து, இது தொடர்பாக கலந்துரையாடல்கள் இடம்பெற்றதனைத் தொடர்ந்து முகத்துவாரம் வெட்டுவதாக முடிவெடுக்கப்பட்டதனைத் தொடர்ந்து துறைசார் திணைக்கள அதிகாரிகள், விவசாயிகள் மற்றும் மீனவர்களது பிரசன்னத்துடன் முகத்துவாரம் வெட்டும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.