குருநாகல் மாவட்ட பொல்பிட்டிகம மகாநாம தேசிய பாடசாலை மாணவர்கள் மட்டக்களப்பு ஒல்லாந்தர் கோட்டைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
மாவட்டத்தில் வரலாற்றுப் பெறுமதி மிக்க புராதன தளமான திகழும் ஒல்லாந்தர் கோட்டைக்கு வருகை தந்த இவர்கள் குறித்த கோட்டையினை பார்வையிட்டுள்ளனர்.
இதன் போது கருத்து தெரிவித்த இப்பாடசாலை மாணவர்கள், 400 வருடங்கள் பழமைவாய்ந்த ஒல்லாந்தர்களினால் கட்டப்பட்ட இக் கோட்டையானது இன்றுவரை சிதைவடையாது பேணிப் பாதுகாக்கப்படுவதுடன், கோட்டையானது கம்பிரமாக காணப்படுவதைக் கண்டு ஆச்சரியம் அடைவதாகப் பெருமிதமடைந்தனர்.
இதன் போது 100ற்கும் அதிகமான மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றார் ஆகியோர் சுற்றுப்பயணத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.