பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களில் இருந்து இதுவரை அறவிடப்பட்ட வசதிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது .

 


பாடசாலை அபிவிருத்திச் சங்கங்களில் இருந்து இதுவரை அறவிடப்பட்ட வசதிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரச, மாகாண மற்றும் அரச தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

மின்கட்டண அதிகரிப்பு காரணமாகவே வசதிக் கட்டணத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக இந்த தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

அதன் தலைமைச் செயலாளர் அஜித் கே. திலகரத்ன கண்டியில்   ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.