யௌவனப் பருவத்தினரின் சுகாதார மேம்பாட்டு திட்டமிடல்களின் ஒரு பகுதியாக ஆரயம்பதி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் யௌவனப் பருவத்தினருக்கான பிணியாய்வு நிலைய திறப்பு விழா 11.02.2026 ,அன்று சிறப்பாக நடைபெற்றது.
மேலும், தொழுநோய் மாதத்தினை முன்னிட்டு, மாணவர்களுக்கிடையில் சித்திரப் போட்டி ஏற்பாடு செய்யப்பட்டு, அவர்களின் எண்ணங்களை வண்ணமயமாக வெளிப்படுத்திய படைப்புகள் இந்நிகழ்வில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.
மற்றும் இந்நிகழ்விற்கு மட்டடகளப்பு RDHS தொழுநோய் பிரிவுக்கு பொறுப்பான Dr. லுபோஜிதா அவர்களும், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி Dr.சிவலக்க்ஷன் அவர்களும் கலந்து கொண்டிருந்தனர்
இந்நிகழ்வானது, மாகாண சுகாதார பயிற்சி நிலையத்தில் பயிற்சி பெறும் பொது சுகாதார மருத்துவ பயிலுநர்களான “ஆரா” குழுவினரின் களப் பயிற்சியின் செயல் திட்டத்தின் ஒரு பகுதியாக நடைமுறைப்படுத்தப்பட்டது.



































