1958
ஆம் ஆண்டு தளவாய் கிராம மக்களால் மரத்தடியில் சிறு பந்தல் அமைத்து
பெருமாளை வழிபட்டு வந்தார்கள். பல வருடங்களுக்கு பின்னர் 1972 ஆம் ஆண்டு
கற்களால் சிறு கோவில் அமைத்திருந்தனர் .
இதன்போது விசேட தினங்களிலும், வருடாந்த திருவிழாக் காலங்களிலும் எம் பெருமானை வழிபட்டு வந்தார்கள்.
அதன் பின்னர் 2012 ஆம் ஆண்டு ஆலய நிர்வாகத்தினராலும் கிராம
பொதுமக்களாலும் பெருமானின் ஆலயத்தை சிறிய அளவிலேனும் புனரமைத்து
கும்பாவிஷேகம் செய்ய வேண்டும் என்று திட்டமிட்டனர் . இதன் எதிரொலியாக ஆலய
மூலஸ்தானம் ஒன்றை கட்டினார்கள்
இவ்வாறாக ஆரம்பித்த ஆலயத்
திருப்பணி வேலைகள் போதியளவு நிதி இல்லாததால் இடை நடுவே கைவிடப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 9 வருடங்கள் திருவிழாக்கள் செய்யாமல், விசேட தினத்தில்
மட்டும் பூசைகள் செய்து வந்தார்கள்.
இவ்வேளையில்தான் யாழ்பாணத்தைச்
சேர்ந்தவரும் லண்டனில் வசித்து வருபவருமான மகாலிங்கம் குகேந்திரன் (செல்வா )
அண்ணன் 2019 ஆம் ஆண்டு தளவாய் ஸ்ரீ வடபத்திரகாளி அம்மன் ஆலயத்தில் வாசல்
வளைவு கோபுரம் ஒன்றையும், தளவாய் பாடசாலையில் இருந்த பிள்ளையார் கோவிலில் மாணவர்கள் அமர்ந்து பஜனை மற்றும் வழிபாடு செய்வதற்காக மண்டபம் ஒன்றையும் அமைத்து கொடுத்தார். அந்த
தருணத்தில் எமது பெருமானின் ஆலயத்திற்கும் ஏதேனும் உதவி செய்யுங்கள் என்று
கேட்டதன் நிமிர்த்தம் அவர் நேரடியாக வருகை தந்து ஆலயத்தினைப் பார்வையிட்டு
நாங்கள் எதிர்பார்த்ததை விட பெருமாளின் ஆலயத்தை 2019 ஆம் ஆண்டு புனருத்தாண
வேலைகளை ஆரம்பித்து 2023 ஆண்டு தனது முழு நிதிப் பங்களிப்பில் பெருமானின்
ஆலயத்தை கட்டி முடித்து கும்பாபிஷேகமும் செய்து ஆலயத்தைப் புதுப் பொலிவு
பெறச் செய்தார். மட்டக்களப்பு மாவட்டத்தில் ஸ்ரீ நிவாஷ வெங்கடேஷ்வரர்
ஆலயம் இதை தவிர வேறு ஆலயம் இல்லை என்பதை ஆலய நிர்வாக சபை பெருமையோடு
தெரிவித்துக்கொள்கிறது பக்த அடியார்கள் வருகைதந்து எம் பெருமானின் அருளை பெற்று செல்லுமாறு ஆலய நிர்வாக சபையினர் பணிவுடன் அழைக்கின்றனர்