Sports for Development எனும் தொனிப்பொருளில் மாவட்ட மட்ட பெண்கள் கிரிக்கெட் போட்டி வெபர் மைதானத்தில் நடாத்தப்பட்டது.

 

 






 

 Ceri நிறுவனத்தின் ஏற்பாட்டில் Sports for Development எனும் தொனிப்பொருளில் சிறுவர்களிடத்தே நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் நோக்கில் நடாத்தப்படும் நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமான மாவட்ட மட்ட பெண்கள் கிரிக்கெட் போட்டியானது இன்றைய தினம் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் நடாத்தப்பட்டது.

இதில் காத்தான்குடி, மண்முனை வடக்கு, ஏறாவூர்ப்பற்று, கோறளைப்பற்று ஆகிய பிரதேச செயலக  அணிகள் பங்குபற்றின.

 இதில் கோறளைப்பற்று வாழைச்சேனை கல்குடா “வளர்நிலா சிறுவர் கழக” வீராங்கனைகள் முதலிடத்தினை பெற்றுக்கொண்டனர்.

இறுதிப் போட்டியில் அணி 53 ஓட்டங்களை இலக்கை இலகுவாக  துடுப்பெடுத்தாடி 4 over நிறைவில் எதுவித விக்கட் இழப்பும் இன்றி அபார வெற்றியை பெற்றுள்ளதுடன் அடுத்து இடம்பெறவுள்ள மாகாணமட்ட போட்டியிலும் தெரிவாகியுள்ளனர்.

கடந்த 28.08.2023 இடம்பெற்ற நட்புரீதியான கிரிக்கட் சுற்று போட்டிகளிலும் 1 ஆம் இடத்தை பெற்று கொண்டதும் குறிப்பிடதக்கது .