இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கு, சர்வதேச நீதிப் பொறிமுறையை உறுதி செய்யுமாறு கோரி
மட்டக்களப்பு காந்திபூங்காவில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று இடம்பெற்றது.
வடக்கு
கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாடு செய்த போராட்டத்தில், மத
குருமார்கள், சிவில் சமூக அமைப்பின் பிரதிநிதிகள்,
காணாமலாக்கப்பட்டவர்களின்
உறவினர்கள் எனப் பலரும்கலந்துகொண்டனர்.
வடகிழக்கு
மக்களின் கலாச்சார தளங்களை அத்துமீறாதே, சமூக செயற்பாட்டார்கள் மீதான
அடக்குமுறையை நிறுத்து, வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி வேண்டும்,
வடக்கு கிழக்கு தமிழ் முஸ்லீம் மக்களின் இன அடையாளங்களை அழிக்காதே, பேர்குற்றங்கள் செய்தவரை நீதியின் முன் நிறுத்து போன்ற கோசங்களை
போராட்டக்காரர்கள் தாங்கியிருந்தனர்.
ஜ.நாவிற்கான அறிக்கை ஒன்றை மட்டக்களப்பு மனித உரிமை ஆணைக்குழு அதிகாரிகளிடம் கையளித்த பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்தது.











