ஊழல் எதிர்ப்பு சட்டத்தை அமுல்படுத்துவதற்கான அதிவிசேட வர்த்தமானி, அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
இந்த சட்டம் எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது.