அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் செவ்வாய்க்கிழமை (12) பல்வேறு மாவட்டங்களில் அமைந்துள்ள வைத்தியசாலைகளில் சாத்வீக போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது.
வைத்தியசாலைகளின் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
வைத்தியர்கள் நாட்டை விட்டுச் செல்கின்றமையினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு தொடர்பில் தீர்வொன்றைப் பெற்றுத்தருமாறு கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் செவ்வாய்க்கிழமை நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 02 மணி வரை குறிப்பிட்ட எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.