கோறளைப் பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச சிறுவர் சபையின் பிரதேச சிறுவர்களின் முன்னேற்றம் தொடர்பாக ஆராயும் விஷேட கலந்துரையாடல் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எம்.எச்.சபூஸ் பேகம் ஏற்பாட்டில் (18) பிரதேச செயலகக்
கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இதன்போது ஒக்டோபர் 01ஆம் திகதி இவ் வருடத்திற்கான சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மேற்கொள்ளப்படவுள்ள சிறுவர் அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகள் மற்றும் பிரதேச சிறுவர் சபை அங்கத்தவர்களுக்கான அடையாள அட்டை வழங்குதல் போன்ற விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் மூன்று சிறுவர் களுக்கான கல்வி, பாதுகாப்பு மற்றும் அவர்களின் மேம்பாடு பற்றிய சம்பவ மாநாடுகளும் நடாத்தப்பட்டு, மாணவர்களுக்கான புத்தகப்பைகளும் அன்பளிப்புச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது








