ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தில் வீட்டுத் தோட்டங்களை அமைப்பதை ஊக்குவிக்கும் உதவிக் கொடுப்பனவுகள் கையளிப்பு

 








ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேச செயலகத்தில் வீட்டுத்தோட்டங்களை அமைப்பதை ஊக்குவிப்பதற்காக முதல் கட்ட உதவித்தொகைகளை கையளிக்கும் நிகழ்வு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் (18)இன்று இடம் பெற்றது.
பிரதேச செயலாளர் கோ.தனபாலசுந்தரம் தலைமையில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஆ.சுதாகரன் கலந்துகொண்ட இந்நிகழ்வில் வீட்டுத்தோட்டங்களை அமைப்பதற்கு பிரதேச மக்களை ஊக்குவிக்கும் முதல் கட்ட உதவித்தொகையாக தலா ஒருவருக்கு 3500/- பெறுமதியான காசோலைகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வு பொதுமக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதற்காக நாடளாவிய ரீதியில் பல்வேறு நிதியுதவிகளை வழங்கி வரும் பெரெண்டினா நுண்நிதி அரச சார்பற்ற நிறுவனத்தின் நிதி அனுசரணையில் நடைபெற்றது.
அத்துடன் இதுவரை 1687 பயனாளிகள் செங்கலடி பிரதேசத்தில் இவ்வாறான வாழ்வாதார உதவிகளைக் கிடைக்கப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதன்போது பிரதேச கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் , பெரெண்டினா நுண்நிதி நிறுவனத்தின் முகாமையாளர் எஸ். செந்தூரன், பிரதேச முகாமையாளர் பா.பிரதிலீபன் உட்பட நிறுவனத்தில் ஊழியர்கள் மற்றும் பயனாளிகள் எனப் பலர் கலந்து கொண்டனர்.