கண்டி மாவட்டத்தில் இருந்து மட்டக்களப்பு மாவட்டம் நோக்கி கண்டி வத்தேகம கல்வி வலயத்திற்குட்பட்ட குண்டசாலை விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலய மாணவர்கள் கல்விச் சுற்றுலா மேற்கொண்டனர்.
குண்டசாலை விவேகானந்தா தமிழ் மகா வித்தியாலய அதிபர் செல்வி.எஸ்.மகேஸ்வரி தலைமையில் ஒரு நாள் கல்விச் சுற்றுலாவாக வருகை தந்தனர்.
குறித்த கல்விச் சுற்றுலாவில் தரம் ஆறு தொடக்கம் உயர்தரம் வரையான ஆண் மற்றும் பெண் மாணவர்களும், ஆசிரியர்களுமாக கலந்து கொண்டிருந்தனர்.
கல்விச் சுற்றுலாவில் மாணவர்கள் மஹாஓயா வெந்நீர் ஊற்று, உன்னிச்சை குளம், கொக்கட்டிச்சோலை தாந்தோன்றீஸ்வரர் ஆலயம், கல்லடிபாலம், மாமாங்கம் மாமாங்கப் பிள்ளையார் ஆலயம், மட்டக்களப்பு வெளிச்ச வீடு, வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை இறுதியாக பாசிக்குடா கடற்கரைக்கு சென்றனர்.
இறுதியாக இரவு 07 மணியளவில் கண்டி நோக்கி மாணவர்கள் புறப்பட்டனர்.


.jpeg)


.jpeg)




.jpeg)






