இந்து சமுத்திரத்திலும் தென்பசுபிக்கிலும் இலங்கை தீவு வலிமை மிக்க நாடுகளிடையேயான மோதலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை - ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்க

 


சில காலத்திற்கு முன்னர் என்னை ஒரு நான் சீன ஆதரவாளனா இந்திய ஆதரவாளனா என கேட்டார் நான் அதற்கு உறுதியாக நான் இந்திய ஆதரவாளன் இல்லை என தெரிவித்து சீன ஆதரவாளன் இல்லை எனவும் தெரிவித்தேன் என குறிப்பிட்டுள்ள  ஜனாதிபதிரணில்விக்கிரமசிங்க அதற்கு அந்த நபர் நீங்கள் நடுநிலைவாதியா என கேட்டார் நான் அதற்கு நடுநிலைவாதியில்லை இலங்கை ஆதரவாளன் என குறிப்பிட்டேன் என தெரிவித்துள்ளார்.

வல்லரசுகளின் அல்லது பிராந்தியத்தில் உள்ள ஏனைய நாடுகளின்  முன்னுரிமைக்குரிய விடயங்கள் இலங்கையின் முன்னுரிமைக்குரிய விடயங்கள் இல்லை என்பதை பலர் புரிந்துகொள்ளவில்லை எனவும்  ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்திலும் தென்பசுபிக்கிலும் இலங்கை தீவு வலிமை மிக்க நாடுகளிடையேயான மோதலில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை என்பதை தனது கருத்துக்களில்  ரணில்விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

இந்த நாடுகள் சமூக பொருளாதார சூழல் பாதுகாப்பு  போன்ற விடயங்களில் தங்களின் முன்னுரிமைகளை கொண்டுள்ளன தங்களின் இறைமையையும் சுதந்திரத்தையும் மதிக்கவேண்டும் என விரும்புகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்து சமுத்திரத்தில் தென்பசுபிக்கில் உள்ள தீவுகள் குவாட் அல்லது சீனாவிற்கு புறம்பான் முன்னுரிமைகளை கொண்டுள்ளன என தெரிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி தனது தன்னாட்சியை மதிக்கும் எவருடனும்இலங்கை இணைந்து செயற்பட தயாராகவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.