மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி கலாமதி பத்மராஜா தலைமையில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சினி ஸ்ரீகாந்த் அவர்களின் ஏற்பாட்டில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற இவ்விசேட கலந்துரையாடலில், மட்டக்களப்பு மாவட்டத்தின் பால் நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைக்கும் செயலணி மற்றும் உள வள ஆற்றுப்படுத்தல், சிறுவர் அபிவிருத்தி, பெண்கள், சிறுவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன் போது கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் கணவனை இழந்த மற்றும் பிரிந்து வாழும் பெண்களுக்கு தொழில் வாய்ப்பை பெற்றுக்கொடுப்பது தொடர்பாகவும், அவர்களின் பிள்ளைகளை பராமரிப்பதற்கு பிள்ளைகளை பராமரிக்கும் காப்பகம் ஆரம்பிக்கப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பிலும் அரசாங்க அதிபரினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கு சமூகத்தில் போதைப் பொருள் பாவனையற்ற நல்லதொரு சூழலை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என இங்கு சுட்டிக்காட்டப்பட்டதுடன்,
பிரதேச மட்டத்தில் பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளை குறைக்கும் நடவடிக்கைகளின் போது எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் அதிகாரிகள் இதன்போது கருத்து தெரிவித்துள்ளனர்.
பாடசாலை மாணவர்கள் மத்தியில் இடைவிலகள் மற்றும் தொடர்ச்சியான வரவிண்மையை கட்டுப்படுத்தி சிறந்த கல்வி சமூகத்தை உருவாக்கும் நோக்கில் கட்டாயக் கல்விக் குழுக்களை வலயக் கல்வி பணிமனை ஊடாக கிரமமாக செயற்படுத்த வேண்டும் என்ற வேண்டுகோள் இதன்போடு விடுக்கப்பட்டுள்ளது.
தற்கொலை முயற்சிகளை தடுத்தல் மற்றும் உளவளத்துணை செயற்பாடுகளை ஒருங்கிணைத்து பிரதேச செயலக மட்டத்தில் சிறுவர் பெண்கள் பிரிவின் செயற்பாடுகள் எவ்வாறு செயற்படுத்தப்பட்டு வருகின்றமை தொடர்பாகவும் இதன்போது உத்தியோகத்தர்களால் விளக்கமளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் உதவி மாவட்ட செயலாளர் ஆ.நவேஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார வைத்திய அலுவலகத்தின் உளநள வைத்திய அதிகாரி டான் செளந்தரராஜா மற்றும் மாவட்ட சிறுவர் நன்னடத்தை உத்தியோகத்தர் அருனாளினி, பிரதேச செயலாளர்கள், பொலிசார், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டுள்ளனர்.










