கல்லடி முகத்துவாரம் இக்னேசியஸ் வித்தியாலயத்தில் சேவைநலன் பாராட்டு விழா!


(கல்லடி செய்தியாளர்)











மட்டக்களப்பு கல்லடி புதுமுகத்துவாரம் புனித இக்னேசியஸ் வித்தியாலயத்தில் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் சென்றுள்ள அதிபர் திருமதி வசந்தி ஜெயந்திரராசா, பிரதி அதிபர் த.உமாபரமேஸ்வரன் மற்றும் ஆசிரியர் இ.சோமசுந்தரம் ஆகியோரை வாழும்போதே வாழ்த்தும் நோக்கில் நடத்தப்பட்ட சேவைநலன் பாராட்டு விழா இன்று வியாழக்கிழமை (21) வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.

வித்தியாலய அதிபர் பி.தங்கவேல் தலைமையில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வில், ஒய்வு பெற்றுச் சென்ற அதிபர், பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோருக்கு பாடசாலை அதிபர் மற்றும் ஆசிரியர்களால் பாராட்டுப் பத்திரம் மற்றும் அன்பளிப்புக்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது அதிபர் மற்றும் ஆசிரியர்களால் ஓய்வு பெற்றுச் சென்றுள்ள அதிபர், பிரதி அதிபர் மற்றும் ஆசிரியர் ஆகியோரின் கடந்தகாலச் செயற்பாடு கள் தொடர்பாக விரிவாக எடுத்துக் கூறப்பட்டது.